சிரியா விமானப்படைத்தளம் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அறுவர் கொல்லப்பட் டதாக சிரிய நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்குமுன் கான் ஷெய்கோன் என்ற சிரிய நகரம் மீது நடத்தப்பட்ட நச்சுவாயுத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 70 பேர் பலியாகினர். இதற்கு அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத்தே காரணம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டி இருக்கிறார். இந்நிலையில், அந்த நச்சுவாயுத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக் கும் விதமாக சிங்கப்பூர் நேரப்படி நேற்றுக் காலை 8.40 மணிக்கு 'ஷேரத்' என்னுமிடத்தில் உள்ள சிரிய விமானப்படைத்தளம் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசித் தாக்கியது. மத்தியத் தரைக்கடல் பகுதியில் 'யுஎஸ்எஸ் போர்ட்டர்', 'யுஎஸ்எஸ் ரோஸ்' எனும் இரு போர்க்கப்பல் களில் இருந்து 59 'டாமஹாக்' வகை ஏவுகணைகளை அமெரிக்கா பாய்ச்சியது.
மத்திய தரைக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த இரு போர்க்கப்பல்களில் இருந்து சிரியா விமானப்படைத்தளம் மீது அமெரிக்கா 'டாமஹாக்' ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. படம்: ராய்ட்டர்ஸ்

