பிரான்சில் ஆயுதங்களை ஒப்படைத்த போராளிகள் குழு

பிரான்சில் ஆயுதங்களை ஒப்படைத்த போராளிகள் குழு

1 mins read

பாரிஸ்: இடிஏ எனப்படும் போராளிகள் குழு ஒன்று தெற்கு பிரான்சில் அதன் ஆயுதங்களை பிரெஞ்சு போலிசாரிடம் ஒப்படைக்கத் தொடங்கியுள்ளது. இதனை பிபிசி நிருபர் ஒருவர் உறுதிப்படுத்தி யுள்ளார். தெற்கு பிரான்சில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த வன்முறைச் சம்பவங்களில் 800 பேர் கொல்லப்பட்டதற்கும் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்ததற்கும் இடிஏ குழுவே காரணம் என்று பிரான்ஸ் தெரிவித்தது. இந்நிலையில் அக்குழு 2011ஆம் ஆண்டு அரசாங்கத்துடன் சண்டை நிறுத்த உடன்பாடு செய்து கொள்வதாக அறிவித்தது. ஆனால் அக்குழு ஆயுதத்தை ஒப்படைக்காமல் இருந்துவந்தது.