எகிப்து தேவாலயங்களில் குண்டுவெடிப்பு

எகிப்து தேவாலயங்களில் குண்டுவெடிப்பு

1 mins read
b687adf3-2b04-4baf-b38d-5782b4347647
-

கெய்ரோ: எகிப்தின் டன்டா நகரில் உள்ள தேவாலயத்தில் குண்டு வெடித்ததில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் என்று அந் நாட்டின் அதிகாரிகள் தெரிவித் தனர். இதில் 50 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பு ஏற்க வில்லை. குண்டுவெடிப்புக்கான காரணமும் தெரியவில்லை. போப் பிரான்சிஸ் எகிப்துக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் வேளையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில்தான் கெய்ரோவின் ஆகப்பெரிய தேவா லயத்தில் தற்கொலையாளி ஒருவன் தாக்கியதில் 25 பேர் கொல்லப்பட்டதுடன் 49 பேர் காயம் அடைந்தனர். இந்தப் பயங்கரவாதத் தாக்கு தலில் பல பெண்களும் குழந்தை களும் கொல்லப்பட்டனர். இதற்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பு ஏற்றுக் கொண்டது.

குண்டுவெடிப்புக்குப் பிறகு தேவாலயத்தில் கூடிய மக்கள். படம்: இபிஏ