பினாங்கு முதலமைச்சர் பதவி விலக நெருக்குதல்

பினாங்கு முதலமைச்சர் பதவி விலக நெருக்குதல்

1 mins read

கோலாலம்பூர்: பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பதவி விலக வலியுறுத்தும் தீர்மானத்தை பினாங்கின் அம்னோ கட்சி, நாடாளுமன்றத்தில் முன்மொழியவிருப்பதாக மலேசிய ஊடகத் தகவல் தெரிவித்தது. வரும் மே 19ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தின்போது அத் தீர்மானம் முன்மொழியப்படும் என்று தி ஸ்டார் தகவல் கூறியது. ஊழல் விவகாரம் தொடர்பில் விசாரணையை எதிர்கொள்ளும் திரு லிம், பதவி விலகுமாறு தாங்கள் விடுத்த கோரிக்கைகளை புறக்கணித்ததாக பினாங்கு, அம்னோ கட்சித் தலைவர் ஜைனல் அபிடின் கூறினார்.