எகிப்தில் அவசரநிலை அறிவிப்பு

எகிப்தில் அவசரநிலை அறிவிப்பு

1 mins read
3c67730a-4222-4345-9fdf-78cb9c78108d
-

கெய்ரோ: எகிப்தில் இரு தேவாலயங்களில் குண்டு வெடித்ததையடுத்து அந்நாட்டில் அடுத்த மூன்று மாதங்களுக்கு அவசரநிலை நடப்பில் இருக்கும் என்று பிரகடனம் செய்யப்பட் டுள்ளது. அது பற்றிய அறிவிப்பை அந்நாட்டு அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி நேற்று அறிவித் துள்ளார். கைது ஆணை உத்தரவு இல்லாமல் சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்வதற்கும் சந்தேகப் பேர்வழிகளின் வீடுகளில் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதற்கும் இந்த நடவடிக்கை அனுமதிக்கிறது. எகிப்தில் நைல் டெல்டா நகரான டான்டாவிலும் அலெக் சாண்ட்ரியா நகரிலும் ஞாயிற்றுக் கிழமை குண்டு வெடித்ததில் குறைந்தது 49 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

எகிப்தின் டான்டா நகரில் உள்ள தேவாலயத்தில் குண்டு வெடித்ததில் காயமுற்ற ஒருவரை மீட்புக் குழுவினர் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். இரு தேவாலயங்களில் குண்டு வெடித்ததில் குறைந்தது 49 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். படம்: ராய்ட்டர்ஸ்