கலிஃபோர்னியா தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் பலி

கலிஃபோர்னியா தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் பலி

1 mins read
2c732825-5f36-4026-a0b8-e6b89e6c245f
-

சான் பெர்னார்டினோ: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தின் வகுப்பறைக்குள் நுழைந்த ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் 8 வயது சிறுவன் உள்பட மூவர் உயிரிழந் தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவன் என்று சந்தேகிக்கப்படும் நபர் அப்பள்ளிக்கூடத்தில் ஆசிரிய ராகப் பணியாற்றிய அவரது மனைவியைச் சுட்டுக் கொன்ற தாகவும் அந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த ஆசிரியருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த இரு மாணவர்கள் காயம் அடைந்த தாகவும் போலிசார் கூறினர். காயம் அடைந்த இரு மாணவர்களில் 8 வயது சிறுவன் உயிரிழந்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பிறகு வெளியேற்றப்பட்ட மாணவர்களில் ஒருவரான இச்சிறுமியின் முகத்தில் பயம் இன்னும் நீங்கவில்லை. படம்: ராய்ட்டர்ஸ்