கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட இளையர்கள்

கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட இளையர்கள்

1 mins read

காஜாங்: பெற்றோர்கள் அற்ற இளையர்களை வலுகட்டாயமாகப் பிச்சை எடுக்க வைத்து பணம் ஈட்டிய கும்பலிடமிருந்து கிட்டத்தட்ட 20 பேர் மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் காப்பாற்றப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இளையர்கள் 17 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் நால்வர் பெண்கள். பினாங்கில் இருக்கும் பெற்றோர்கள் அற்ற இளையருக்கான இல்லம் ஒன்றிலிருந்து அந்த இளையர்கள் அக்கும்பலால் சிலாங்கூருக்குக் கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.