அமைதியான தீர்வுக்கு சீன அதிபர் வலியுறுத்தல்

அமைதியான தீர்வுக்கு சீன அதிபர் வலியுறுத்தல்

1 mins read

பெய்ஜிங்: வடகொரியாவுடனான பதற்றநிலைக்கு அமைதியான முறை யில் தீர்வு காணும்படி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் சீன அதிபர் சீ ஜின்பிங் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் அதிபர் டிரம்ப்பிடம் நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் கடந்த வாரம் ஃபிளோரிடாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத் தக்கது. அண்மைய காலமாக வடகொரியா நடத்தி வரும் அணுவாயுதச் சோதனைகளால் கொரிய தீபகற் பத்தில் பதற்றநிலை நிலவி வருகிறது. வடகொரியாவின் இந்தச் சோதனை கள் குறித்து தென்கொரியாவும் ஜப்பானும் அக்கறை தெரிவித் துள்ளன.