பியோங்யாங்: வடகொரியா நேற்று பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த வேளையில் மேலும் ஒரு அணு ஆயுத சோதனை அல்லது ஏவுகணை சோதனையை அந்நாடு மேற்கொள்ளக்கூடும் என்ற யூகம் நிலவியது. அணு ஆயுத சோதனை மேற் கொள்ள வடகொரியா தயாராக இருப்பதாக வடகொரியாவை கண்காணித்து வரும் ஓர் அமைப்பு தெரிவித்தது. 6வது அணு ஆயுத சோதனையை வடகொரியா விரைவில் மேற்கொள்ளக்கூடும் என்பதை துணைக்கோளப் படங்கள் காட்டின. அணு ஆயுதத்தை சோதனை செய்யும் இடத்தில் புதிய நடமாட்டம் தெரிவதாக இணையத் தள செய்தி கூறியது. இந்நிலையில் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது வடகொரியாவின் மிரட்டல் பற்றிப் பேசினார்.
கொண்டாட்டத்திற்கு இடையில் வடகொரியாவின் மிரட்டல்
1 mins read

