தென்சீனக் கடல் தீவுக்கு செல்வதை ரத்து செய்த பிலிப்பீன்ஸ் அதிபர்

தென்சீனக் கடல் தீவுக்கு செல்வதை ரத்து செய்த பிலிப்பீன்ஸ் அதிபர்

1 mins read

மணிலா: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பீன்ஸ் உரிமை கொண்டாடும் தீவுக்குச் சென்று அங்கு தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றப்போவதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே கூறியிருந்தார். அவர் அங்கு செல்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தற்போது அத்தீவுக்குச் செல்வதை திரு டுட்டர்டே ரத்து செய்துள்ளார். சீனாவுடனான நட்புறவை தான் மதிப்பதாக அவர் கூறியுள்ளார். தென்சீனக் கடல் பகுதியில் பெரும்பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. புருணை, மலேசியா, பிலிப்பீன்ஸ், தைவான், வியட்னாம் ஆகிய நாடுகளும் அப்பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.