ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜாவா தீவில் நேற்று இரு படகுகள் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த விபத்தைத் தொடர்ந்து இன்னும் ஐந்து பேரைக் காணவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார். முதல் விபத்தில் ஓர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த ஒரு மரப் படகு மூழ்கியது. அப்படகில் 22 பேர் சென்று கொண்டிருந்ததாகவும் அவர்கள் அனைவருமே விவசாயிகள் என்றும் பயிர் அறுவடை செய்வதற்காக அவர்கள் படகில் சென்றுகொண்டிருந்தபோது அப்படகு ஆற்றில் மூழ்கியதாகவும் கூறப்பட்டது. அதில் 9 பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் போலிசார் கூறினர். இரண்டாவது விபத்தில் இருவர் உயிரிழந்ததாக பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவித்தது.
இந்தோனீசியாவில் இரண்டு படகு விபத்துகள்: 11 பேர் மரணம்
1 mins read

