சிரியாவில் நான்கு நகரங்களிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள்

சிரியாவில் நான்கு நகரங்களிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள்

1 mins read

டமாஸ்கஸ்: சிரியாவில் நீண்ட காலமாக உள்நாட்டுச் சண்டை நீடிக்கும் வேளையில் சண்டை நடக்கும் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் வெளியேற உடன்பாடு காணப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளின் முயற்சியால் இந்த உடன்பாடு காணப்பட்டுள்ளது. அந்த உடன்பாட்டின்படி அரசாங்கத் தரப்பும் கிளர்ச்சித் தரப்பினரும் சண்டையை தற் காலிகமாக நிறுத்த இணக்கம் தெரிவித்துள்ளனர். அதன்படி சிரியாவில் கிளர்ச்சித் தரப்பினர் வசம் உள்ள இரு கிராமங் களிலிருந்து மக்களை வெளி யேற்றும் நடவடிக்கை தொடங்கி யிருக்கிறது. அந்த கிராமங் களிலிருந்து ‌ஷியா பிரிவினர் வெளியேறி வருகின்றனர்.