வாஷிங்டன்: சிகாகோ விமான நிலையத்தில் யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் வலுக்கட்டாயாகமாக இழுத்துச் செல்லப்பட்டு வெளியேற்றப்பட்ட பயணிக்கு மூளையில் அதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். அந்த சம்பவத்திற்குப் பிறகு வியட்னாமைச் சேர்ந்த 69 வயது மருத்துவரான டேவிட் டாவோ, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் அவர் புதன்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாகவும் அவரது வழக்கறிஞர் தாமஸ் டிமிட்ரியோ கூறினார். டேவிட் டாவோ, யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் அந்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.
விமானத்திலிருந்து இழுத்துச் சென்ற பயணிக்கு மூளையில் அதிர்ச்சி
1 mins read

