துருக்கியில் தாக்குதல் நடத்த சதி: ஐவர் கைது

துருக்கியில் தாக்குதல் நடத்த சதி: ஐவர் கைது

1 mins read

இஸ்தான்புல்: துருக்கியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த வர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட ஐவரை போலிசார் கைது செய்துள் ளனர். அந்த ஐவரும் ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு உடையவர்கள் என்று போலிசார் கூறினர். துருக்கியில் அந்நாட்டு அதிபர் தாயிப் எர்டோகனுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங் கள் குறித்து மக்களின் கருத்தை அறிய நாளை அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதனை சீர்குலைக்கும் வகையில் துருக்கியில் தாக்குதல் நடத்த அந்த சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படு கிறது.