அமெரிக்க குண்டுவீச்சில் இந்திய தீவிரவாதிகள் பலி

அமெரிக்க குண்டுவீச்சில் இந்திய தீவிரவாதிகள் பலி

1 mins read
a27d2086-ae92-4ad6-8df1-83367325fb07
-

கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங் கர்ஹார் மாநிலத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து அமெரிக்கா ஆகப் பெரிய வெடி குண்டு தாக்குதலை நடத்தியுள் ளது. சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அணுசக்தி அல்லாத குண்டு வீசப் பட்டதில் 36 ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இச்சம்பவத்தில் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரு வரும் மாண்டதாக உறுதி செய்யப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கேரளாவின் வடக்க புரத்தைச் சேர்ந்த டி.கே.முர்‌ஷீத் அகமது, 25, என்பவர் இந்தக் குண்டுவீச்சில் மாண்டதாக அவ ரின் குடும்பத்துக்குத் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த வெடிகுண்டான GBU-43B அமெரிக்க ஆகாயப் படை வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்தபோது. படம்: ஏஎஃப்பி