கொள்ளை; ஐவர் கைது

கொள்ளை; ஐவர் கைது

1 mins read

கோலாலம்பூர்: நான்கு நாட்களுக்கு முன்பு கோலாலம்பூர் ஜாலான் லோக் யிவ்வில் உள்ள வீட்டில் 17 பங்ளாதேஷ் நாட்டவர்களிடம் கொள்ளையடித்த ஐவரை போலிசார் கைது செய்துள்ளனர். இதே பகுதியில் இதே போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஐவரிடமிருந்து 30 கைத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன என்று வட்டார காவல்துறை துணை ஆணையர் முகமட் சுக்ரி காமென் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் மற்றொருவரையும் போலிசார் தேடி வருகின்றனர்.