நியூயார்க்: அளவுக்கு அதிகமான பயணிகள் விமான டிக்கெட்டுகளுக்கு பதிவு செய்துகொண்டிருக்கும்போது இருக்கையை விட்டுக்கொடுக்க முன்வரும் பயணிகளுக்கு 10,000 அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் விமானச் சிப்பந்திகளுக்கு இருக்கை தேவைப்பட்டதால் விமானத்தில் சென்ற மருத்துவர் ஒருவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால் யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட கெட்ட பெயரை போக்கும் வகையில் இத்தகைய சலுகையை வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது. முன்னதாக டெல்டா நிறுவனம், அதுபோன்ற சம்பவம் நடந்தால் இருக்கையை விட்டுக்கொடுக்கும் பயணிக்கு 9,950 அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையாற்ற திட்டமிட்டுள்ளதாக யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான இருக்கையை விட்டுக் கொடுக்கும் பயணிகளுக்கு 10,000 டாலர்
1 mins read

