காபூலில் தாக்குதல்: 8 பேர் பலி; பலர் காயம்

காபூலில் தாக்குதல்: 8 பேர் பலி; பலர் காயம்

1 mins read
0aa56596-d09d-4934-bd01-a873a33ceec1
-

காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேட்டோ படையினர் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். தாக்குதலில் உயிரிழந்தவர் களில் பெரும்பாலானோர் பொது மக்கள் என்று அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறினார். காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகே போராளி கள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் உள்பட சுமார் 25 பேர் காயம் அடைந்தனர். பரபரப்புமிக்க சாலையில் நேற்று காலை குண்டு வெடித்த தாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் டேனிஸ் கூறினார். அந்த குண்டு வெடிப்பில் இரு கனரக வாகனங்கள் சேதம் அடைந்ததாகவும் அவர் சொன்னார். அத்தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் தலிபான் போராளிகள் இத்தாக்குதலை நடத்தியிருக் கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

காபூலில் தாக்குதல் நடந்த இடத்தில் போலிசார் புலன்விசாரணையில் ஈடுபட்டுள்ள வேளையில் உள்ளூர் பணியாளர்கள் அவ்விடத்தில் காணப்படும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்