தாராள வர்த்தக ஆதரவாளர் பிரான்சின் புதிய அதிபரானார்

தாராள வர்த்தக ஆதரவாளர் பிரான்சின் புதிய அதிபரானார்

1 mins read
93a44343-0431-403b-9e96-46071a71f0b5
-

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் 39 வயது இமானுவேல் மெக்ரோன் பிரம்மாண்ட வெற்றி பெற்றார். இவர் முன்னாள் முதலீட்டு வங்கியாளர். இதுவரையில் அரசியளில் அரசியலில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட எந்த ஒரு பதவியையும் இவர் வகித்தது இல்லை. தொழில்துறைக்குப் பெரிதும் ஆதரவானவர்.

பிரான்சின் தொழிலாளர் சந்தையை ஒட்டுமொத்தமாகச் சீர்திருத்த வேண்டும் என்பது இவரின் இலக்கு. தாராளமய வர்த்தகத்தை ஆதறிப்பவர் ஆதரிப்பவர். பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதும் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் வலுவடைய வேண்டும் என்பதும் இவரின் நோக்கம். இவரே நாட்டின் ஆக இளைய அதிபர். இமானுவேல் மெக்ரோன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வலசாரி மரின் லி பெண் என்ற 48 வயது மாதைத் தோற்கடித்துள்ளார். இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் மெக்ரோன் 66.06% வாக்குகளைப் பெற்றுள்ளார்.