தோக்கியோ: ஜப்பானியப் பேரரசர் அகிஹித்தோவின் பேத்தியும் இளவரசியுமான மக்கோ தம் முடைய காதலரைத் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தமக்குரிய அனைத்துக் கௌரவங் களையும் கைவிடவிருக்கிறார். இளவரசி மக்கோவின் காதலர் அரச குடும்பத்தைச் சாராத ஒருவர். 24 வயதுடைய கெய் கொமுரோ என்ற இவர் ஒரு கடல் சாகச வீரர். மேலும் தோக்கியோவிலுள்ள அனைத்துலக கிறிஸ்துவ பல் கலைக்கழகத்தில் இளவரசியுடன் இவர் ஒன்றாகப் படித்தவர். இவரை மணந்துகொள்ளும் நிலை யில், இளவரசி தனது அரச உரிமைகளை இழக்க நேரிடும். அந்த இளைஞரை மணந்து கொள்ள அனுமதி கோரி அரச குடும்பத்தினரின் அதிகாரபூர்வ மான அனுமதிக்காக அவர் காத்திருக்கிறார். இளவரசியின் கோரிக்கையை அரச குடும்பம் தீவிர ஆலோச னைகளுக்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளுமேயானால், அதன் பின் னர் அரச உரிமைகள் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடும். இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளவரசி மக்கோ.

