தவறான புகாரால் கொள்ளையர்கள் என கைது செய்யப்பட்ட ஏடிஎம் பணியாளர்கள்

தவறான புகாரால் கொள்ளையர்கள் என கைது செய்யப்பட்ட ஏடிஎம் பணியாளர்கள்

1 mins read
20e56f89-e431-40cf-88e7-82e46c92ce50
-

சுங்கை பட்டாணி: தானியங்கி இயந்திரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த இருவரைக் கொள் ளையர்கள் என நினைத்த பொது மக்கள் அவர்களை போலிசில் சிக்க வைத்தனர். நேற்று அதிகாலை அப்பகுதி யில் இருந்த தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தை (ஏடிஎம்) சீரமைத்துக் கொண்டிருந்தவர் களைக் கொள்ளையர்கள் எனத் தவறாக புரிந்துக்கொண்ட சில ரால் இந்தக் குழப்பம் ஏற்பட்டது. அதிகாலை 5.45 மணியளவில் வங்கியில் கொள்ளையர்கள் புகுந்துவிட்டதாக சுங்கை பட்டாணி போலிசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

அங்கு விரைந்த போலிசார் வங்கியின் முன் ஒரு லாரி நிற்பதையும் வங்கியில் இரண்டு ஆடவர்கள் ஏடிஎம் இயந்திரத்தைத் திறந்து கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனே அவர்களைத் தடுத்த போலிசார் கைதும் செய்தனர். அப்போது அவர்கள் தாங்கள் கொள்ளையர்கள் அல்ல, அந்த ஏடிஎம் இயந்திரம் பழுதடைந்து இருப்பதாகவும் அதனை மாற்ற தங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ள தாகவும் போலிசாரிடம் கூறியுள்ள னர். அவர்களிடம் அதற்குண்டான அனுமதி கடிதமும் இருந்தது. ஆனால் அதிகாலையில் வங்கி நிர்வாகியுடன் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையினால் அவர் கள் இருவரையும் காவல்துறை யினர் விசாரணைக்காக கைது செய்தனர். வங்கி நிர்வாகியுடன் தொடர்பு கொண்டு அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை மாற்ற வந்தவர் களே என்று உறுதிப்படுத்திய பின்னர் காவல்துறையினர் அந்த இரு ஆடவர்களையும் விடுவித் தனர்.

கொள்ளையர்கள் எனப் பொது மக்கள் நினைத்ததால் போலிசாரால் தடுத்து வைக்கப்பட்ட ஆடவர்கள். படம்: இணையம்