அனைத்துலக போலிசிடம் சிக்கிய மலேசிய பயங்கரவாத சந்தேகப் பேர்வழி

அனைத்துலக போலிசிடம் சிக்கிய மலேசிய பயங்கரவாத சந்தேகப் பேர்வழி

1 mins read

பெட்டாலிங் ஜெயா: தென்கிழக்கு ஆசியாவில் 'இண்டர்போல்' என்று அழைக்கப்படும் அனைத்துலக போலிஸ் மேற்கொண்ட நட வடிக்கையில் பயங்கரவாத செயல் களில் ஈடுபட்டதாக நம்பப்படும் மலேசியர் ஒருவர் சிக்கியுள்ளார். துருக்கியிலிருந்து அவர் கோலாலம்பூருக்குக் கொண்டு வரப்பட்டதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. 'சன்பர்ட்-III' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யில் அனைத்துலக போலிஸ், குடி நுழைவு துறை, கடல்துறை ஆகிய வற்றைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டனர். பத்து ஆசியான் நாடுகளில் உள்ள 35 நில, விமான, கடல் எல்லைப் பகுதிகளில் காணாமல் போன பயணப் பத்திரங்களின் தகவல்களை அடிப்படையாக வைத்து கடவுச்சீட்டுகள் சோத னையிடப்பட்டன. இதில் மலேசியருடன் தொடர்பு உள்ளதாக நம்பப்படும் இலங்கை நாட்டைச் சேர்ந்த ஒருவரும் பாலி யில் நடைபெற்ற சோதனையில் அதிகாரிகளிடம் பிடிபட்டார்.