சிட்னி: நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு மெல்பர்ன் நகரிலிருந்து அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரை நோக்கி பறந்த குவான்டாஸ் 'ஏ380' விமானம் அவசரமாக புறப்பட்ட இடத்துக்கே திரும் பியது என்று அந்த விமான நிறு வனத்தின் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை மாலை இரண்டு மணி நேரம் பறந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக நம்பப்படு கிறது. இதற்கிடையே சனிக்கிழமை லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் தரை யிறங்கிய ஏரோமெக்சிகோ விமானத்தின் இறக்கை மோதி யதில் ஓடு பாதையில் இருந்த டிரக் வாகனம் சாய்ந்தது. இதில் டிரக்கில் இருந்த எட்டு ஊழியர் களும் காயம் அடைந்தனர். விமானத்தில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
குவான்டாஸ் விமானம் திரும்பியது
1 mins read

