சோல்: தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹியே மீதான ஊழல் விசாரணை நேற்று தொடங்கியது. அப்போது நீதிமன்றத்தில் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர், முன்னாள் அதிபர் அதிகார துஷ் பிரயோகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார். "பல மில்லியன் டாலர் லஞ்சம் பெறுவதற்காகத் தமது அதி காரத்தை அவர் தவறாகப் பயன்படுத்தி பெரிய நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்," என்றும் அவர் தெரிவித்தார். முன்னாள் அதிபர் பார்க்கின் மிரட்டலில் பாதிக்கப்பட்ட பல பெரிய நிறுவனங்களின் தலைவர்களில் சாம்சங் குழுமத்தின் தலை வர் ஜே. ஒய். லீயும் ஒருவர் என்று கூறப்படுகிறது. அதிபர் பதவியை பார்க் இழப்பதற்கு திரு ஜே.ஒய்.லீயே முக்கிய காரணம்.
ஊழல் குற்றச்சாட்டில் மே மாதம் கைது செய்யப்பட்ட பார்க். கோப்புப் படம்: ஏஎஃப்பி

