மான்செஸ்டர்: பயங்கரவாதியின் சகோதரர் அதிரடி சோதனையில் கைது

மான்செஸ்டர்: பயங்கரவாதியின் சகோதரர் அதிரடி சோதனையில் கைது

2 mins read
2c73a666-3979-4682-8267-c5444df4fef0
-

மான்செஸ்டர்: பாப் பாடகி அரி யானா கிராண்டே இசை நிகழ்ச் சியில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் பயங்கரவாதியின் சகோதரரை கைது செய்துள்ளனர். தற்கொலையாளி 22 வயது சல்மான் அபிடி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதையடுத்து தென் மான்செஸ் டர் சோர்ல்டனில் உள்ள வில்பிரா ஹாம் ரோட்டில் உள்ள அவரது சகோதரரின் வீடு சுற்றி வளைக்கப் பட்டது. பின்னர் இஸ்மாயில் அபிடி என்ற 23 வயது இளையரை காவல்துறையினர் கைது செய்த னர். மான்செஸ்டர் அரங்கில் நடத்தப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தாக்கு தல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை யினர் கூறினர்.

இஸ்மாயில் அபிடியை கை விலங்கு மாட்டி காவல்துறையினர் அழைத்துச் செல்வதைக் காணொளிக் காட்சிகளில் காண முடிந்தது. அதே பகுதியில் உள்ள மோரி சன்ஸ் பேரங்காடிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வேனில் அவர் ஏற்றப்பட்டார். முன்னதாக தகவல் தொழில் நுட்ப நிர்வாகியான அவரை தரையில் படுக்குமாறு காவல்துறை யினர் உத்தரவிட்டதாகவும் அப் போது கறுப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வந்த அதிகாரிகள் அவரை நெருங்கி கைது செய்த தாகவும் அப்போது அவர் புன்சிரிப் புடன் இருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறினர். இசை நிகழ்ச்சியில் 22 பேர் கொல்லப்படுவதற்கும் 119 பேர் காயம் அடைவதற்கும் காரணமான தற்கொலையாளி சல்மான் அபிடி, சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத் தின் முன்னாள் மாணவர் ஆவார். இவரும் கைது செய்யப்பட்ட இஸ்மாயில் அபிடியும் பிரிட்டனில் பிறந்தவர்கள்.

பயங்கரவாதியின் சகோதரரைக் கைது செய்து அழைத்துச் செல்லும் காவல்துறையினர். படம்: இணையம்