மான்செஸ்டர் தாக்குதல்: லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மான்செஸ்டர் தாக்குதல்: லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

1 mins read

லண்டன்: மான்செஸ்டர் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்கு தலைத் தொடர்ந்து லண்டனில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலுக்குக் காரண மான இன்னும் பலரை பிரிட்டிஷ் போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அத்தாக்குதல் தொடர்பில் பிரிட்டனில் குறைந்தது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மான்செஸ்டர் அரங்கில் தற்கொலைத் தாக்குதலில் ஈடு பட்ட 22 வயது சல்மான் அபிடி தனி ஒருவனாக செயல்பட்டிருக்க முடியாது என்று பிரிட்டிஷ் போலிசார் கருதுவதால் அவனது உடந்தையாளர்களைத் தேடும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பரந்த, அதிநவீன சதித் திட்டத்தில் சல்மான் அபிடி ஓர் அங்கம் என்பது ஆரம்பக்கட்ட புலன்விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக போலிசார் கூறி னர். அத்தாக்குதல் தொடர்பி லான விசாரணை லிபியா வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சல்மான் அபிடியின் தந்தையும் சகோதரரும் லிபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மான்செஸ்டர் அரங்கில் திங்கட்கிழமை இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது அங்கு குண்டு வெடித்ததில் சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்; சுமார் 64 பேர் காயம் அடைந்தனர். கடந்த பத்து ஆண்டுகளில் பிரிட்டனில் நடந்த மோசமான தாக்குதல் இது என்று கூறப் படுகிறது.