மணிலா: பிலிப்பீன்சின் தென்பகுதியில் உள்ள மாராவி நகரில் ஊடுருவிய ஐஎஸ் தொடர்புடைய போராளிகளுடன் பிலிப்பீன்ஸ் ராணுவ வீரர்கள் கடுமை யாகச் சண்டையிட்டு வருகின்றனர். அப்பகுதிக்குள் ஊடுருவிய துப்பாக்கிக்காரர்கள், அங்கு வசிக்கும் மக்களை படுகொலை செய்து வருவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தீவிரவாதிகளை வெளியேற்றுவதற்காக அப்பகுதியில் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே ராணுவ ஆட்சியைப் பிரகடனப்படுத்தினார். மேலும் போராளிகளை ஒடுக்குவ வற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் அந்நகரில் உள்ள கத்தோலிக்க தேவலாய பாதிரியார் ஒருவரையும் பொதுமக்களில் சிலரையும் தீவிரவாதிகள் நேற்று பிணைக் கைதிகளாக பிடித்துசென்றுள்ளனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போராளிகளுடன் பிலிப்பீன்ஸ் ராணுவ வீரர்கள் தொடர்ந்து கடும் சண்டை
1 mins read

