எகிப்து: கிறிஸ்துவர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு; 26 பேர் மரணம்

எகிப்து: கிறிஸ்துவர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு; 26 பேர் மரணம்

1 mins read

எகிப்து நாட்டில் கிறிஸ்துவர்கள் மீது துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயமடைந்தனர். தலைநகர் கெய்ரோவிற்குத் தெற்கே அமைந்துள்ள மின்யா மாநிலத்தில் நேற்று இச்சம்பவம் நிகழ்ந்ததாக மாவட்ட ஆளுநர் இஸாம் அல் பெடாய்வி தெரிவித் தார். புனித சேமுவல் மடத்திற்கு அவர்கள் சென்றுகொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நிகழ்த் தப்பட்டது. பயங்கரவாதத்தின் பின்னணி யில் இருக்கும் இஸ்லாமிய சித் தாந்தங்களுக்கு எதிராகப் போரிட சவூதி அரேபியத் தலைநகர் ரியாத் தில் திறக்கப்பட்ட ஒரு புதிய நிலை யத்தின் திறப்புவிழா நிகழ்ச்சியில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தார் எல் சிசி கலந்துகொண்டார். அதையடுத்துச் சில நாட்களி லேயே எகிப்தில் சிறுபான்மையினர் மீதான இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ராணுவ உடையில் வந்த பத்துப் பேர் பேருந்தில் இருந்தவர்களை நோக்கி கண் மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதாக மேஜர் முகம்மது அப்தெல் மொனைம் தெரிவித்தார்.