வாஷிங்டன்: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மருமகன் ஜெரட் குஷ்னரின் பங்கு குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை ஆராய்ந்து வரும் வேளையில் குஷ்னரைப் பற்றி மேலும் தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்கத் தேர்தலுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் 1 அல்லது 2ஆம் தேதியில் அமெரிக்காவுக் கான ரஷ்யத் தூதர் செர்ஜி கிசில்யாக்கை குஷ்னர், டிரம்ப் டவரில் சந்தித்துப் பேசியிருக் கிறார். அப்போது டிரம்பின் நிர்வாகக் குழுவுக்கும் ரஷ்யாவுக்கும இடையே ரகசியத் தொடர்பு ஏற்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து ரஷ்யத் தூதருடன் குஷ்னர் பேச்சு நடத்தியதாக உளவுத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறி யுள்ளனர். அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரக வசதிகளைப் பயன்படுத்தி அத்தகைய ரகசியத் தொடர்பை ஏற்படுத்தலாம் என்று குஷ்னர் ஆலோசனை கூறியதாக ரஷ்யத் தூதர் கிசில்யாக், உயர் ரஷ்ய அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யாவுடன் ரகசியத் தொடர்பு ஏற்படுத்த தூதர் ஒருவருடன் குஷ்னர் ஆலோசனை
1 mins read

