அனைத்துலக அளவில் பிரிட்டிஷ் ஏர்வேஸின் கணினிக் கட்டமைப் பில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக பிரிட்டனின் இரண்டு பெரிய விமான நிலையங்களில் தடைபட்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸின் சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆயினும் விமானங்கள் தாமதமா கப் புறப்படுவதாலும் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட சேவைகளாலும் குழப்பம் நீடிக்கிறது. பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்புக் கோரிய அந்த நிறுவனம், விமானம் புறப்படுவது பற்றிய தகவலை அறிந்துகொண்டு விமான நிலையத்துக்கு வரும்படி முன்பதிவு செய்திருந்த பயணி களுக்கு கோரிக்கை விடுத்தது.
நேற்று காட்விக் விமான நிலையத்திலிருந்து அந்நிறுவனத் தின் விமானங்கள் தாமதமாகக் கிளம்பின. ஹீத்ரூ, காட்விக் ஆகிய விமான நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டன. உலக அளவில் அந்நிறுவன விமானங்களின் செயல்பாடு சிக்கலானது. இவ்விரு விமான நிலையங் களிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருக்க நேர்ந்தது. அவதிக்குள்ளான பலர் விமானப் பயணங்களை ரத்து செய்தனர்.

