லண்டன்: பிரிட்டிஷ் தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க் கட்சியான தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பைனுக்கு ஆதரவு கூடி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு முன்பு பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேயின் கன்சர்வேடிவ் கட்சி முன்னணி யில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறின. இந்த மாதத் தொடக்கத்தில் கன்சர்வேடிவ் கட்சி 20 விழுக்காடு முன்னணியில் இருப்பதாக கருத்துக்கணிப்பு கள் கூறின. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இரு கருத்துக்கணிப்புகள் தொழிற் கட்சி ஆதரவாளர்களுக்கு நம் பிக்கையைக் கொடுத்துள்ளது. தொழிற்கட்சியைவிட ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தற்போது 12 விழுக்காடு மட்டுமே முன்னணியில் உள்ளது.
பிரிட்டனில் இம்மாதம் 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திருவாட்டி மே 20 இடங்களை இழக்கக் கூடும் என்றும் இதனால் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழக்கக்கூடும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. எதிர்வரும் தேர்தலில் திருப்பு முனையாக எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமையக்கூடும் என்று மற்றொரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறு வது தொடர்பாக பேச்சைத் தொடங்குவதற்கு முன்பாக பிரிட்டிஷ் மக்களின் அமோக ஆதரவைப் பெறும் நோக்கத்தில் பிரதமர் தெரேசா மே தேர்தலை முன்கூட்டியே நடத்த தீர்மானித் தார். மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் திருவாட்டி மே தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

