வாஷிங்டன்: பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகுவதற்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த சனிக்கிழமை நடந்த ஜி7 கூட்டத்தில் பாரிஸ் பருவநிலை உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்த திரு டிரம்ப், அந்த உடன்பாடு குறித்து தீர்மானிக்க தமக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறினார். இந்நிலையில் அந்த உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலக திரு டிரம்ப் தீர்மானித்திருப்பதாக செய்தி நிறுவனத் தகவல்கள் கூறுகின்றன. 2015 ஆம் ஆண்டு பாரிசில் காணப்பட்ட பருவநிலை உடன்பாட்டுக்கு 200 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலக அதிபர் டிரம்ப் முடிவு
1 mins read

