அமெரிக்கா அறிவித்த பயணத் தடையை செயல்படுத்த உச்ச நீதிமன்றத்தில் மனு

அமெரிக்கா அறிவித்த பயணத் தடையை செயல்படுத்த உச்ச நீதிமன்றத்தில் மனு

1 mins read

வா‌ஷிங்டன்: ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித் திருந்தார். ஆனால் அத்தடைக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங் களும் நடந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் கீழ் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அந்தப் பயணத் தடை பாரபட்சம் காட்டுவதாக உள்ளது என்று கூறி அந்தத் தடையை அமல்படுத்த தடை விதித்து தீர்ப்பளித்தது கீழ் நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து கீழ் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வெள்ளை மாளிகை, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவின் பாது காப்புக்கும் பயங்கரவாதத் தாக்குதலிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாக்கவும் இந்தப் பயணத் தடை அவசி யம் என்று அமெரிக்க நீதித் துறை பேச்சாளர் கூறினார்.