மெல்பர்னில் நடந்த பிணைப்பிடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல்

மெல்பர்னில் நடந்த பிணைப்பிடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல்

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் திங்கட்கிழமை நடந்த பிணைப்பிடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித் துள்ளார். பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துவதாக திரு டர்ன்புல் கூறினார். அத்தாக்குதலில் ஈடுபட்ட 29 வயது துப்பாக்கிக்காரன் ஐஎஸ் போராளி என்று அந்த பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. பிணைப்பிடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிக்காரன் யாக்கூப் கைரியை ஆஸ்திரேலியப் போலிசார் சுட்டுக் கொன்றனர்.

அந்தத் துப்பாக்கிக்காரன் முன்னதாக மெல்பர்ன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ஒருவரை சுட்டுக் கொன்றதுடன் ஒரு பெண்ணை பிணைப்பிடித்து வைத்திருந்தான். தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்துவந்த போலிசார் அவனை சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவன் கொல்லப் பட்டதாகவும் அவனிடம் சிக்கி யிருந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் போலிசார் கூறினர். அந்த துப்பாக்கிக்காரன் குற்றப் பின்னணியைக் கொண்டவன் என்றும் அவன் அண்மையில்தான் சிறைச்சாலையிலிருந்து விடு விக்கப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் கூறின.