நூறு பேருடன் மியன்மார் விமானம் மாயம்

நூறு பேருடன் மியன்மார் விமானம் மாயம்

1 mins read

யங்கூன்: மியன்மார் ராணுவ விமானம் ஒன்று நேற்று காணாமல் போனது. இதனால் 104 பயணிகளின் நிலை தெரியவில்லை என்று நேற்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தமான் கடலுக்கு மேல் பறந்துகொண் டிருந்த விமானம் காணாமல் போனதைத் தொடர்ந்து தேடும் நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. "பிற்பகல் 1.30 மணி அளவில் விமானத்து டனான தொடர்பு துண்டிக்கப்பட்டது," என்று ராணுவம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.