லண்டன்: பிரிட்டிஷ் தேர்தல் பிர சாரத்தில் இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்ட பிரதமர் தெரசா மேயும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பைனும் முக்கிய வாக்குறுதி களை மக்களுக்கு மீண்டும் நினை வூட்டினர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஏராள மான வேலை வாய்ப்புகளும் குடி யிருப்புகளும் ஏற்படும் என்றும் சிறந்த போக்குவரத்து இணைப் புகளுக்கு வழி வகுக்கும் என்றும் பிரதமர் மே தெரிவித்தார்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பைன், "தேசிய சுகாதார சேவையைக் காப்பாற்றுவதற்கு இன்னும் 24 மணி நேரமே உள் ளது," என்று எச்சரித்தார். பிரிட்டிஷ் பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை எட்டு மணிக்கு (சிங் கப்பூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.00 மணி) வாக்குச்சாவடிகள் திறக்கப்படுகின்றன. இதற்கிடையே கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு பயங்கர வாதத் தாக்குதல் நடைபெற்று உள்ளதால் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப் பட்டிருந்தது. இந்நிலையில் போலிசாரின் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதாக தொழிற்கட்சி பிரசாரம் செய்து வருகிறது. கடைசி நாளான நேற்று பிரத மரின் பிரசாரம் லண்டனில் தொடங்கி சவுத்கோஸ்ட், நோர் ஃபோக், நாட்டிங்காம்ஷயர், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் வரை நடை பெற்றது.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் மேயும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பைனும் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

