வாஷிங்டன்: எஃபிஐ எனப்படும் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தன்னிடம் "உதவி அடிப்படையிலான உறவு" வைத்திருக்க விரும்பியதாகவும் தம்மிடம் விசுவாசத்தை எதிர் பார்த்ததாகவும் நாடாளுமன்றக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கவிருந்தார். நேற்றிரவு திரு கோமி சாட்சியம் அளிக்கவிருந்த நிலையில் அதுபற்றி அவர்த புதன்கிழமை ஓர் அறிக்கை வெளியிட்டார். நாடாளுமன்றக் குழுவினர் முன்னிலையில் தான் கூற விருப்பது பற்றி அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
ரஷ்யாவுடனான தொடர்பு குறித்து முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃபிளைனிடம் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை செய்வதைக் கைவிடுமாறு திரு டிரம்ப் தமக்கு நெருக்குதல் கொடுத்ததாகவும் திரு கோமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். திரு ஃபிளைன் கடந்த டிசம்பர் மாதம் ரஷ்யத் தூதருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து தவறான அறிக்கைகள் வெளியிட்டது தொடர்பில் அவர் விசாரிக்கப் படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று திரு டிரம்ப் தன்னிடம் வலியுறுத்தியதாகவும் திரு கோமி கூறினார். இந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்தில் திரு கோமி, அமெரிக்க அதிபரால் அதிரடியாக நீக்கப்பட்டார்.
திரு கோமி பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஜனநாயகக் கட்சி யினருக்கும் அமெரிக்க மக்களுக் கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் திரு கோமி, நாடாளுமன்றக் குழு முன்னிலை யில் நேற்றிரவு சாட்சியம் அளித் துள்ளார். அமெரிக்கத் தேர்தலில் திரு டிரம்ப் வெற்றி பெறச் செய்வதற்காக அவரது பிரசாரக் குழுவினர் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை திரு டிரம்ப் மறுத்து வருகிறார். ரஷ்யாவும் இக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

