மலேசிய-சிங்கப்பூர் பாதையில் நவீன முறை: மலேசிய மோட்டார் வாகனமோட்டிகள் பதிவு

மலேசிய-சிங்கப்பூர் பாதையில் நவீன முறை: மலேசிய மோட்டார் வாகனமோட்டிகள் பதிவு

1 mins read

ஜோகூர் பாரு: மலேசிய-சிங்கப் பூர் நுழைவாயிலில் மலேசிய மோட்டார் வாகன குடிமக்களுக் காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன 'MBIKE' முறைக்கு மொத்தம் 123,422 மலேசியர்கள் பதிந்துகொண்டுள்ளனர். இந்தப் புதிய முறை மலே சியர்கள் விரைவில் குடிநுழைவு சோதனைகளை முடித்து வெளி யேறுவதற்கு உதவுகிறது. இது குறித்து பேசிய மலேசிய துணைப் பிரதமர் டாக்டர் அஹமட் ஸாஹிட் ஹமிடி, ஒவ்வொரு நாளும் இரண்டு நாட்டையும் இணைக்கும் நுழைவாயிலில் சரா சரியாக 77,000 பேர் 'MBIKE' முறையைப் பயன்படுத்தி வரு கின்றனர் என்றார். அந்த தானியக்க முறை கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி முழுமையாக அமலாக்கப்பட்டது.

இதனால் மலேசிய மோட்டார் வாகனமோட்டிகள் குடிநுழைவு நடைமுறைகளைக் கடந்து செல்லும் நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது என்று அவர் கூறினார். சுல்தான் இஸ்கந்தர் சுங்கத் துறை, குடிநுழைவு வளாகத்துக்கு அவர் நேற்று வருகையளித்தார். மோட்டார் சைக்கிள் பாதையில் உச்சநேர நெரிசலைக் குறைப் பதற்காக குடிநுழைவுத்துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. "முன்பு 'MBIKE' தடங்களில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கும் தற்போது தீர்வு காணப்பட்டுள் ளது," என்றார் அவர். 'MBIKE' முறை பழுது இன்றி 100 விழுக் காடு முழுமையாகச் செயல்படு வதை உறுதிப்படுத்துவதே தமது இன்றைய பயணத்தின் நோக்கம் என்று துணைப்பிரதமர் ஸாஹிட் மேலும் தெரிவித்தார்.