பிரஸ்ஸல்ஸ்: பிரிட்டிஷ் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மே அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அந்நாடு வெளியேறுவது தாமதமாகலாம் அல்லது தோல்வி அடையலாம் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலை வர்கள் தெரிவித்துள்ளனர். இம்மாத இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் மே பேச்சு நடத்துவதாக இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் வலுவான முறையில் பேச்சு நடத்த பேராதரவு அளிக்கும்படி அறை கூவல் விடுத்து பிரதமர் மே திடீர் தேர்தலை அறிவித்திருந்தார்.
ஆனால் அண்மைய பங்கர வாதத் தாக்குதல்களால் ஐரோப் பிய ஒன்றிய விவகாரம் தேர்தல் பிரசாரத்தில் எடுபடவில்லை. இதனால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியும் தொழிற்கட்சியும் பயங்கர வாதத்திற்கு எதிராக தேர்தல் பிர சார வியூகத்தை மாற்றிக்கொண் டன. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜெர்மன் உறுப்பினர் குயின்தெர் ஒட்டிங்கர், "முன்பு திட்டமிட்டபடி வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை தொடங்குமா என்பது தெரியவில்லை," என்றார். இந்தப் பேச்சுவார்த்தை மூலம் 2019 மார்ச் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் சுமூகமான முறையில் வெளியேறும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எதிர் பார்த்தது.
தேர்தல் முடிவு குறித்து பிரிட் டிஷ் பத்திரிகைகள் பல் வேறு கோணங் களில் செய்தி களை வெளி யிட்டிருந்தன. பிரதமர் மேயின் தேர்தல் சூதாட் டம் தோல்வி என்றது 'தி டைம்ஸ்'. படம்: ஏஎஃப்பி

