மலேசியாவில் கர்ப்பிணிகளைப் போல நடித்து குழந்தைகளுக்கான பால் மாவு திருடும் கும்பல் சிக்கி யுள்ளதாக அந்நாட்டின் போலிஸ் தெரிவித்துள்ளது. இரு பெண்கள், இரு ஆட வரைக் கொண்ட கும்பல் பெட்டா லிங் ஜெயாவில் டாட்டாராம் சன் வேயில் உள்ள பேரங்காடி ஒன்றில் திருடும்போது பிடிபட்டதாக பெட் டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் அதிகாரி முகம்மது ஜனி சே டின் தெரிவித்தார். அவர்கள் நால்வரும் 25க்கும் 49க்கும் இடைப்பட்ட வயதினர் என்றும் கடந்த புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட அவர்கள் 'கால் இடுக்கில் பால் திருடும் கும்பல்' என்று போலிசாரால் வகைப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
அந்தக் கும்பலைச் சேர்ந்தவர் கள் பேரங்காடிகளில் திருடும் பால் மாவு டின்களை தங்களது ஆடைகளுக்கு உள்ளே இரு கால் களுக்கும் இடையில் மறைத்து திருடி வந்ததால் அவர்களுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டதாக செய்தியாளர்களிடம் திரு முகம்மது ஜனி தெரிவித்தார். "கர்ப்பிணிகளைப் போல வேட மணிந்த பெண்கள் முதலில் கடைக் குள் நுழைவார்கள். அவர்களைத் தொடர்ந்து வரும் ஆண்கள் கடை யில் வாங்குவதற்காகப் பொருட் களைத் தேடுவதுபோல நடிப்பார் கள். பின்னர் குழந்தைகளுக்கான பால் மாவு டின்களைத் திருடி தங் களது ஆடைகளுக்குள் மறைத்த வாறே வெளியேறிவிடுவார்கள்.

