பாரிஸ்: பிரான்சில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோனின் கட்சி மகத்தான வெற்றி பெறும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் மெக்ரோன் கட்சிக் குச் சாதகமாகவே அமைந் துள்ளன. பிரான்சில் மெக்ரோன் ஏற்கெனவே அளித்த வாக்குறுதி களை நிறைவேற்ற வேண்டு மானால் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி தனிப் பெரும்பான்மை பெற வேண்டும். முதல் சுற்று முடிவில் மெக்ரோன் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும் 32.3% வாக்குகள் கிடைத்துள்ளன. பிரான்சின் மற்ற கட்சிகளான குடியரசு கட்சிக்கு 16% வாக்குகளும் வலதுசாரி தேசிய முன்னணிக் கட்சிக்கு 13.2% வாக்குகளும் சோஷியலிஸ்ட் கட்சிக்கு 7.4% வாக்குகளும் கிடைத்துள்ளன. இரண்டாம் சுற்று முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளி யிடப்படும்.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 577 தொகுதிகளில் 445 தொகுதிகளில் மெக்ரோனின் கட்சி வெற்றி பெறும் என்று முன்னுரைப்புத் தகவல்கள் தெரி விக்கின்றன. பிரான்சில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் என் மார்ச் கட்சியைச் சேர்ந்த 39 வயது இம்மானுவல் மெக்ரோன் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றார். இந்நிலையில் 577 இடங்களைக் கொண்ட நாடாளு மன்றத்துக்கு முதல் சுற்று தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 விழுக் காட்டுக்கும் அதிகமான வாக்கு களைப் பெறுகிற வேட்பாளர்தான் வெற்றி பெற முடியும்.

