தைவானுடன் உறவை முறித்துக்கொண்ட பனாமா சீனாவுடன் அரசதந்திர உறவு

1 mins read

தைப்பே: தைவானுடன் நீண்டகால அரசதந்திர உறவுகளை முறித்துக் கொண்டிருப்பதாக பனாமா தெரி வித்துள்ளது. அதே சமயம் சீனாவுடன் பனாமா உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. "ஒரே சீனா" கொள்கையை அங்கீ கரிப்பதாகவும் தைவான் சீனாவின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது என்றும் பனாமா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பனாமாவின் நடவடிக்கைக்கு தைவான் அதன் சினத்தையும் வருத்தத்தையும் வெளிப் படுத்தியுள்ளது. பல ஆண்டு கால நட்புறவைப் புறக்கணித்துள்ள பனாமா, தங்களை அச்சுறுத்து வதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது. சீனாவிலிருந்து பிரிந்துசென்ற மாநிலமாகவே தைவான் கருதப்படுகிறது. தைவானுடன் இப்போதுதான் 20 நாடுகள் அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளன.

இந்நிலையில் தைவானுடன் உறவுகளை துண்டித்துக் கொள்வதாகவும் சீனாவுடன் அரசதந்திர உறவுகளை ஏற் படுத்திக் கொண்டுள்ளதாகவும் பனாமா அறிவித்துள்ளது. பனாமாவின் இந்த அறி விப்பைத் தொடர்ந்து சீனாவுடன் பனாமா உறவை ஏற்படுத்திக் கொள்ள வகை செய்யும் ஆவணத்தில் சீன வெளியுறவு அமைச்சரும் பனாமா வெளியுறவு அமைச்சரும் கையெழுத் திடுவதைக் காட்டும் புகைப் படங்களை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பனாமாவின் இந்த முடிவை சீன அரசாங்கமும் மக்களும் பெரிதும் வரவேற்பதாக சீன வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.