கென்யா தலைநகர் நைரோபியில் ஏழு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 15 பேரைக் காணவில்லை என்றும் தேடும் பணி தொடர்ந்து நடந்துவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செஞ்சிலுவைச் சங்க மீட்புப் பணியாளர்கள் அவ்விடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அக்கட்டடம் இடிந்து விழுந்ததும் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பலர் அவ்விடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர். அக்கட்டடத்தின் சுவர்களில் ஏற்கெனவே வெடிப்புகள் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். படம்: ராய்ட்டர்ஸ்
நைரோபியில் கட்டடம் இடிந்து விழுந்தது; மீட்புப் பணி தீவிரம்
1 mins read

