அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு; பலர் காயம்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு; பலர் காயம்

1 mins read

வெர்ஜினியா மாநிலத்தின் அலெக்ஸாண்ட்ரியாவில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து அமெரிக்க போலிசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற கொறடாவான ஸ்டீவ் ஸ்கேலிஸ் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். பந்து விளையாட்டில் ஈடு பட்டிருந்த குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை துப்பாக்கிக்காரன் ஒருவன் சுட்ட தாகச் சம்பவத்தை நேரில் கண்ட வர்கள் தெரிவித்தனர்.

100க்கும் மேற்பட்ட குண்டுகள் பயன்படுத்தப் பட்டதாகச் செய்திகள் கூறின. அந்த சந்தேக நபர் போலிசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அலெக்ஸாண்ட்ரியா போலிசார் டுவிட்டரில் தெரிவித்தனர். மோ புரூக்ஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர், "பெரும் சத்தம் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது, ஒரு துப்பாக்கியையும் உடலின் ஒரு பகுதியையும் கண்டேன். பின்னர் மீண்டும் சுடும் சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுதுதான் துப்பாக்கிக் காரன் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதை அறிந்தேன்," என்றார்.

அதேநேரத்தில் ஸ்டீவ் ஸ்கேலிஸ் அலறுவதைக் கேட்க முடிந்தது. அவர் சுடப்பட்டிருந்தார் என்றார் புரூக்ஸ் மிச்சிகன் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் பிஷப், "நான் ஸ்கேலிஸ் சுடப்படுவதை நேரடி யாகவே பார்த்தேன். ஸ்கேலிஸ் குறிபார்த்து சுடப்படுவதற்கு ஏற்றவாறு நின்றிருந்தார்," என்றார். துப்பாக்கிக்காரன் தரையில் விழும் வரை பாதுகாப்பு அதிகாரிகள் அவனை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 50, 100 குண்டுகள் பாய்ந்திருக்கும் என்று புரூக்ஸ் கூறினார்.