எரிந்து கருகிய 27 மாடி கட்டடம்: பலர் மரணம், 50க்கும் மேற்பட்டோர் காயம்

எரிந்து கருகிய 27 மாடி கட்டடம்: பலர் மரணம், 50க்கும் மேற்பட்டோர் காயம்

2 mins read
99160372-d792-4c56-8a8d-669c832b019f
-

லண்டனின் கிரென்ஃபெல்ட் டவர் என்ற 27 மாடிக் கட்டடத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் மரணம் அடைந்தனர். 70க்கும் மேற்பட் டோர் காயமடைந்துள்ளனர் என்று லண்டன் நகர ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இரண்டா-வது தளத்தில் பிடித்த தீ கட்டடம் முழுவதும் பரவியது. 11வது மாடி வரையில் உள்ள குடியிருப்பாளர்களை மீட்டு விட்ட தாக தீயணைப்பு அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள் கூறின. ஆனால் கட்டடத்தின் மேற் தளங்களில் மக்கள் அலறும் சத்தம் கேட்டதாகவும் அது கொடூ ரமாக இருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

மேல் மாடியில் மாட்டிக் கொண்டுள்ள பலரும் போர்வை களை கயிறாகப் பாவித்து தீயில் இருந்து தப்பிக்க முயன்றதாக டெய்லி மெயில் செய்தி தெரிவித்தது. தீயில் சிக்கிய பல குடியிருப் பாளர்களின் நிலை என்ன ஆயிற்று என்று இன்னும் தெரிய வில்லை என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்தார். "உயர் மாடியில் இருவர் மாட்டிக்கொண்டிருப்பது தெரிந் தது. அவர்கள் தங்களது கைத் தொலைபேசி மூலம் விளக்கை அடித்து மக்களிடம் சமிக்ஞைகளை அனுப்பி உதவி கேட்டனர். "ஆனால், உயர்மாடிக்கு தீய ணைப்புப் படையினரால் போக முடியவில்லை. தீ எரிந்துகொண்டே இருந்தது.

அவர்களது தொலை பேசியின் விளக்கொளியும் அணைந்து விட்டது," என்று சம்பவத்தை நேரில் பார்த்த விக்டோரியா கோல்ட்ஸ்மித் ஸ்கை நியூசிடம் கூறினார். தீயை அணைக்க 40 வாகனங் களில் சென்ற 200 தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரமாக போராடி வருகின்றனர். கட்டடம் சரிந்து விழும் அபாயம் உள்ளது என்று தீயணைப்புப் படை சொன்னது. "தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் சுவாசக் கருவிகளை அணிந்துகொண்டு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் பணி புரிகின்றனர். இது மிகப் பெரிய, கடுமையான சம்பவம். ஏராளமா னோரை பணியில் ஈடுபடுத்தியதுடன் சிறப்புக் கருவிகளையும் பயன்படுத்துகிறோம்," என்று லண்டன் தீயணைப்புப் படையின் துணை ஆணையர் டான் டாலி கூறினார்.