பிரசல்ஸ்: ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளி யேறிய பின்னரும் பிரிட்டனில் வசிக்கும் ஐரோப்பிய மக்கள் தொடர்ந்து தங்கலாம் என்று பிரிட்டிஷ் பிரிதமர் தெரேசா மே உறுதி அளித்துள்ளார். பெல்ஜியத் தலைநகர் பிரசல் ஸில் பிரிட்டன் வெளியேற்றம் குறித்த பேச்சுவார்த்தை தொடங் கியபோது அவர் இந்த உறுதியை அளித்தார். அந்த அமைப்பி லிருந்து பிரிட்டன் வெளியேறும் பட்சத்தில் பிரிட்டனில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை பெற்ற மக்கள் பிரிட்டனைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள் ளப்பட மாட்டார்கள் என்று திருவாட்டி தெரேசா மே, பிரசல்ஸ் மாநாட்டில் கூறினார்.
பிரிட்டனில் ஐரோப்பியர்கள் 3 மில்லியன் பேர் வசிப்பதாக கணக் கிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக சென்ற ஆண்டு பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் ஐரோப்பியர் களின் எதிர்காலம் குறித்த சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் பிரிட்டனில் வசிக்கும் ஐரோப்பி யர்களின் உரிமைகள் பாது காக்கப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் அறிவித்துள்ளார். இதற்கிடையே ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னரும் பிரிட் டனில் வசிக்கும் ஐரோப்பியர் களின் உரிமைகளைப் பாதுகாக்க பிரிட்டன் முன்வந்திருப்பது நல்ல தொடக்கம் என்று கூறியுள்ளார். பிரசல்ஸ் மாநாட்டின் இறுதி நாளன்று குடியேறிகள் பிரச்சினை. பாதுகாப்பு, பொருளியல் பிரச் சினைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

