தெற்கு பிலிப்பீன்ஸ் நகரமான மராவியைத் தீவிரவாதிகள் முற்று கையிடுவதற்கு நிதியுதவி செய்த மலேசியப் பயங்கரவாதி ஒருவன் அங்கு நடந்து வரும் சண்டையில் கொல்லப்பட்டுவிட்டதாக நம்பப் படுகிறது என்று பிலிப்பீன்ஸ் ராணுவம் நேற்றுத் தெரிவித்தது. மலேசியா தேடி வரும் பயங்கர வாதிகளில் முக்கியமானவனான மஹ்மூத் அகமது என்பவன்தான் அந்தப் பயங்கரவாதி என்று சொல்லப்படுகிறது. கடந்த மாதம் மஹ்மூத் பின் அகமது சண்டையின்போது காய மடைந்ததாகவும் இம்மாதம் 7ஆம் தேதி அவன் மரணமடைந்ததாகவும் ஜெனரல் எடுவர்டோ அனோ தெரிவித்தார்.
தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்கள், போராளிகளுக்கான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வற்றை வாங்குவதற்காக 30 மி. பெசோஸ் தொகையை ஐஎஸ் அமைப்பிடம் இருந்து மஹ்மூத் பெற்றுத் தந்ததாகச் சந்தேகிக்கப் படுகிறது. பல்கலைக்கழக விரிவுரையாள ராக இருந்து பயங்கரவாதியாக மாறிய அவன், தெற்கு பிலிப்பீன் சைச் சேர்ந்த மவுட்டி பயங்கரவாத இயக்கத்தில் ஒரு தலைமைப் பொறுப்பை ஏற்றதாக முன்னர் செய்தி வெளியாகி இருந்தது.
இருப்பினும், மஹ்மூத் அகமது வின் சடலம் கிடைக்கவில்லை என்பதால் அவனது மரணத்தை உறுதிப்படுத்த முடியாது என்று மலேசியாவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகள் தெரி வித்தனர். ஆயினும், பயங்கரவாத இயக்கத்திற்காக அவன் நிதி திரட்டி வந்ததை அவர்கள் உறுதி செய்தனர். அப்துல்லா என்ற தன் சகோ தரனுடன் சேர்ந்து மவுட் அமைப்பை எற்படுத்திய ஒமர்கயாம் மவுட்டியும் சண்டையில் மாண்டுபோனதாக நம்பப்படுகிறது.

