பிரசல்ஸ்: ரஷ்யா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட பொருளியல் தடைகளை மேலும் 6 மாதங் களுக்கு நீட்டிக்க முடிவு செய் திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டோனல்ட் டஸ்க் இது தொடர்பான அறிவிப்பை வெளி யிட்டார். பிரசல்ஸில் நடந்த கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒருமனதாக முடிவு செய்ததாக திரு டஸ்க் கூறினார். இது பற்றிய முறையான அறிவிப்பு வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்றும் புதிய தடை ஜூலை 31ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும் என்றும் அவர் தெரி வித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று கிழக்கு உக்ரேன் பகுதி வான்வெளியில் பறந்து கொண் டிருந்தபோது சுட்டு வீழ்த்தப் பட்டது. உக்ரேன் அரசை எதிர்த்து சண்டையிட்டு வந்த கிளர்ச்சியாளர்கள் அந்த விமானத்தை ஏவுகணைகளை வீசித் தாக்கி வீழ்த்தினர். அந்த விமானத்தில் இருந்த 283 பயணிகளும் 15 ஊழியர்களும் விபத்தில் பலியாகினர். உக்ரேனின் போர் விமானம் என்று கருதி அதனை சுட்டு வீழ்த்தியதாக கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கபட்ட போதி லும் அதனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கவில்லை. அந்த விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.