சோல்: தென்கொரியாவில் அமெரிக்காவின் தற்காப்பு ஏவுகணை சாதனம் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்கொரிய மக்கள் நேற்று ஊர்வலமாகச் சென்றனர். சோல் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலம் சென்றதாகக் கூறப்பட்டது. தென்கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே வரும் வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் வேளையில் தென்கொரியாவில் இத்தகைய ஊர்வலம் நடந்துள்ளது.
சர்ச்சைக்குரிய ஏவுகணை எதிர்ப்பு சாதனைத்தை தயார் நிலையில் வைத்திருக்க தென்கொரியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்டாயப்படுத்துவதாக தென்கொரிய ஆர்ப்பாட்டக்கார்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சுமார் 4,000 பேர் கலந்துகொண்டதாக போலிசார் கூறினர். அமெரிக்காவின் தற்காப்பு ஏவுகணை முறைக்கு சீனாவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

