சுமத்ரா: பயங்கரவாதத் தாக்குதலில் போலிஸ் பலி

சுமத்ரா: பயங்கரவாதத் தாக்குதலில் போலிஸ் பலி

1 mins read

ஜகார்த்தா: மில்லியன் கணக்கான இந்தோனீசியர்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடத் தயா ராகிக்கொண்டிருந்த வேளையில், பயங்கரவாதத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் போலிசார் ஒருவர் கொல்லப்பட்டார். வடக்கு சுமத்ராவில் அவர் கத்தியால் குத்தப்பட்டார். இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் மிச்சிகன் விமான நிலையத்தில் பயங்கரவாதி ஒருவன் போலிஸ் அதிகாரி ஒருவரைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவத்தைப் போன்று இது அமைந்தது. மேடன் நகரில் உள்ள வடக்கு சுமத்ரா போலிஸ் தலைமையகத்தில் அதிகாலை மூன்று மணியளவில் இருவர் வேலி தாண்டிக் குதித்த தாக தேசிய போலிஸ் பேச்சாளர் செட்யோ வசிஸ்டோ குறிப்பிட்டார்.

பாதுகாவலர் இருக்கும் அறையில் ஓய்வில் இருந்த அயிப்டு மர்டுவா சிகலிங்கிங் எனும் போலிசாரை முதலில் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்ததாக ஜெனரல் செட்யோ கூறினார். அதே வாயிலில் காவலில் இருந்த மற்றொரு போலிஸ் அதிகாரியான இ.ஜின்டிங் வேறொரு வாயிலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலி சாரிடம் உதவி கோரியதாகக் கூறப்படுகிறது. எதிர்த் தாக்குதல் நடத்தியதில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப் பட்டான். தப்பியோட முயன்ற மற்றொரு பயங்கரவாதியின் காலில் சுட்டு போலிசார் பிடித்தனர். அவனிடம் விசாரணை மேற்கொள் ளப்பட்டுள்ளது.